×

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 3 அசையும் சொத்துக்கள், 1 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திடம் இருந்து ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்று, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ மே 15, 2017-ல் வழக்கு பதிவு செய்தது. அதன்பிறகு, அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது.

The post ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : GI N.N. ,Department of Enforcement ,Karthi ,Chidamparam ,X Media ,Delhi ,I.R. N.N. ,Enforcement Department ,Karthi Chidamparam ,Karnataka ,i. N.N. ,Karthi Chidambaram ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...